மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தின் மத்தியில், உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தக பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் மற்றும் வரி வசூலிக்க ஈரான் அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த நீரிணை உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிசக்தி வர்த்தகத்தின் முக்கிய நுழைவாயிலாக இருப்பதால், இத்தகைய முடிவு சர்வதேச சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, மத்திய கிழக்குப் போரால் ஏற்கனவே எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்பட்டால் எண்ணெய் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது.
இந்தத் திட்டத்தை சட்டமாக்கும் நோக்கில் ஈரான் நாடாளுமன்றம் புதிய மசோதாவை பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கப்பல் போக்குவரத்து, வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பல நாடுகள் இந்த முடிவை கவனத்துடன் நோக்கி வருகின்றன.


