சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) தயாரிப்பில் உருவாகி வரும் ‘தலைவர் 173’ (Thalaivar 173) திரைப்படத்தின் முக்கிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகவுள்ளதாகத் தினத்தந்தி சினிமா செய்திகள் வாயிலாகத் தெரியவந்துள்ளது.

தமிழ் சினிமாவின் இரு பெரும் ஆளுமைகளான ரஜினி – கமல் பல ஆண்டுகளுக்குப் பிறகு தயாரிப்பாளர் – நடிகர் என்ற ரீதியில் இணையும் படம் என்பதால், அறிவிக்கப்பட்ட நாள் முதலே இப்படத்தின் மீது இந்திய அளவில் இமாலய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இயக்குநர் யார்? ரசிகர்களின் எதிர்பார்ப்பு: ‘தலைவர் 173’ திரைப்படத்தின் பயணத்தில் ஆரம்பம் முதலே பல சுவாரசியமான திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. முதலில் இப்படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் அவர் விலகியதை அடுத்து ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி உள்ளே வந்தார். ஆனால், அவரும் சில காரணங்களால் விலகியதாகக் கூறப்படும் நிலையில், சமீபத்தில் ‘ஓ மை கடவுளே’ மற்றும் ‘டிராகன்’ படங்களின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவுக்கு (Ashwath Marimuthu) படக்குழுவினர் பிறந்தநாள் வாழ்த்துப் பகிர்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் புயலைக் கிளப்பியது.

இதன் காரணமாக, அவர்தான் புதிய இயக்குநராக கமிட் செய்யப்பட்டுள்ளாரா? அல்லது படத்தில் வேறு ஏதேனும் மெகா ட்விஸ்ட் இருக்கிறதா? என்ற குழப்பத்திலும் ஆவவிலும் ரசிகர்கள் காத்திருந்தனர்.

இன்று வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: ரசிகர்களின் இந்த நீண்ட நாள் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ‘தலைவர் 173’ படத்தின் லேட்டஸ்ட் மாஸ் அப்டேட் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா (Turmeric Media) மூலம் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது.

இன்று வெளியாகும் அப்டேட்டில் படத்தின் புதிய இயக்குநர் யார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்போ அல்லது படத்தின் தற்காலிக டைட்டில் போஸ்டரோ வெளியாக அதிக வாய்ப்புள்ளதாகத் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அனிருத் இசை – 2027 பொங்கல் ரிலீஸ்: இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் (Anirudh) இசையமைக்கவுள்ளார் என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இதற்கான ஆரம்பகட்ட முன் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், 2027-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை (Pongal 2027) குறிவைத்து இப்படத்தின் ரிலீஸ் திட்டமிடப்பட்டுள்ளது. இன்று வெளியாகும் இந்த சர்ப்ரைஸ் அப்டேட்டை ஒட்டுமொத்த கோலிவுட்டும், ரஜினி – கமல் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கொண்டாடத் தயாராகி வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version