சென்னை: நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியின் 56-வது பிறந்தநாளையொட்டி, தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான சி. ஜோசப் விஜய் தனது எக்ஸ் (X) தள பக்கத்தில் வாழ்த்துத் செய்தி ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.

அதில், “எனது அன்புச் சகோதரரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்திக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். நாட்டின் முன்னேற்றம், ஜனநாயக விழுமியங்களின் பாதுகாப்பு மற்றும் அனைத்துத் தரப்பு மக்களின் நலனுக்காக நீங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறீர்கள். நீங்கள் நீண்ட ஆயுளுடனும், நல் ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

ராகுல் காந்தியின் நெகிழ்ச்சியான பதில்: முதலமைச்சர் விஜய்யின் இந்த வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, தமிழக மக்களின் நலனுக்காக ஒன்றிணைந்து செயல்படப் போவதாக உறுதி அளித்துள்ளார்.

அவர் தனது பதிவில், “உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி சகோதரர் விஜய். இந்திய அரசியலமைப்பைப் பாதுகாப்பதிலும், நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துவதிலும் நாம் எப்போதும் உறுதியுடன் இருக்கிறோம். தமிழக மக்களின் நலன், கண்ணியம் மற்றும் அவர்களின் எதிர்காலக் கனவுகளை நிறைவேற்றுவதற்காக நாம் தொடர்ந்து ஒன்றிணைந்து பணியாற்றுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னணித் தலைவர்களின் இந்த எக்ஸ் தள உரையாடல் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version