புதுடெல்லி: டெல்லியில் CJP பேரணியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி சம்பவத்திற்கு மத்திய அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும், பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “மாணவர்கள் அமைதியான முறையில் நடத்திய பேரணியில் காவல் துறையினர் தடியடி நடத்தியது கடும் கண்டனத்திற்குரியது. இந்தச் சம்பவத்திற்கு மத்திய அரசே முழு பொறுப்பு. பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், மாணவர்களின் உரிமையைப் பறிக்கும் வகையிலும், பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியதைக் கண்டித்தும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகிய இருவரும் உடனடியாகத் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version