புதுடெல்லி:
இந்தியத் தலைமை நீதிபதிக்கு (CJP) ஆதரவு தெரிவித்தும், நீதித்துறை மீதான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தை நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின் போது, எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். பிரதமரின் இல்லத்தை முற்றுகையிட முயன்ற போது, பாதுகாப்புப் படையினரால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அப்போது காவல்துறையின் தடையை மீறி முன்னேற முயன்ற ராகுல் காந்தி உட்பட முக்கியத் தலைவர்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் தேசிய அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.


