மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் குறித்து ஆலோசிப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCS) இன்று இரவு 7 மணிக்கு மீண்டும் கூடுகிறது. போர் தற்போது இரண்டாவது மாதத்தை எட்டியுள்ள நிலையில், இது தொடர்பாக பிரதமர் நடத்தும் மூன்றாவது மிக முக்கியமான உயர்மட்டக் கூட்டம் இதுவாகும்.
இந்தக் கூட்டத்தில், போர் நீடிப்பதால் ஏற்படக்கூடிய சர்வதேசத் தாக்கங்கள் மற்றும் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு (Energy Security) குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. குறிப்பாக, கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் விநியோகச் சங்கிலியில் ஏற்பட வாய்ப்புள்ள தடைகளைத் தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


