இந்திய உச்சநீதிமன்றம் (Supreme Court of India) மற்றும் மத்திய நிதியமைச்சகத்தின் (Ministry of Finance) பெயரைக் குறிப்பிட்டு, விசாரணையில் உள்ள நபர்கள் தங்களது சொத்துகளைச் சரிபார்ப்பதற்காக (Asset Verification) தனிநபர் வங்கி கணக்கில் பணத்தைச் செலுத்த வேண்டும் என ஆன்லைனில் பரவி வரும் நோட்டீஸ் முற்றிலும் போலியானது (FAKE) என PIB Fact Check எச்சரித்துள்ளது.

இணையவழி குற்றவாளிகள் அரசு மற்றும் நீதித்துறையின் முத்திரைகளைப் தவறாகப் பயன்படுத்தி, சட்டவிரோதமாகப் பணம் பறிக்கும் நோக்கில் இதுபோன்ற போலி நோட்டீஸ்களை உருவாக்கிப் பரப்பி வருகின்றனர்.

📌 PIB Fact Check வழங்கியுள்ள முக்கியப் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள்:

  • முற்றிலும் போலி அறிவிப்பு: உச்சநீதிமன்றமோ அல்லது மத்திய நிதியமைச்சகமோ இதுபோன்ற எந்தவொரு நோட்டீஸையும் வெளியிடவில்லை.
  • 🌐 அதிகாரப்பூர்வ வலைதளங்கள் மூலம் சரிபாருங்கள்: எந்தவொரு அரசு நோட்டீஸ் அல்லது கடிதம் வந்தால், அதற்குப் பதிலளிப்பதற்கு முன்பாகச் சம்பந்தப்பட்ட அரசுத் துறை அல்லது ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வாயிலாக அதன் உண்மைத்தன்மையைச் சரிபார்க்கவும்.
  • 🚫 பணம் செலுத்த வேண்டாம்: பணம் கேட்கும் அல்லது வங்கி விவரங்களைக் கேட்கும் இதுபோன்ற சந்தேகத்திற்குரிய நோட்டீஸ்களை நம்பி பணப் பரிவர்த்தனை செய்ய வேண்டாம்.
  • 🔒 தனிநபர் தகவல்களைப் பகிராதீர்கள்: உங்களது தனிநபர் விவரங்கள், வங்கித் கணக்கு விவரங்கள் அல்லது நிதிச் சார்ந்த தகவல்களை அந்நிய நபர்களிடம் பகிர வேண்டாம்.

📲 போலிச் செய்திகளைப் புகாரளித்துச் சரிபார்க்க:

  • 📱 வாட்ஸ்அப் (WhatsApp): +91 8799711259
  • 📧 மின்னஞ்சல் (E-mail): factcheck@pib.gov.in

Share.
Leave A Reply

Exit mobile version