புது டெல்லி:
டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டபோது, அங்குள்ள storeroom-ல் சிக்கிய பாதி எரிந்த ரூ.500 பணக்குவியல் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது தொடர்பாக நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட உயர்மட்ட விசாரணைக்குழு தனது அதிரடி அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
விசாரணைக்குழுவின் முக்கிய Findings (கண்டறிதல்கள்):
- மூன்று குற்றச்சாட்டுகளும் நிரூபணம்: உச்ச நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் தலைமையிலான மூன்று பேர் கொண்ட நாடாளுமன்ற விசாரணைக்குழு, நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளும் முழுமையாக நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
- விளக்கம் அளிக்கத் தவறிய நீதிபதி: அவரது இல்லத்தில் கண்டெடுக்கப்பட்ட பெருமளவிலான ரூ.500 பணக் குவியல்களின் மூலம் என்ன, அதன் உரிமை கோருவது யாரு என்பது குறித்து நீதிபதி தரப்பிலிருந்து எந்தவொரு சரியான மற்றும் ஏற்றுக்கொள்ளக் கூடிய விளக்கமும் அளிக்கப்படவில்லை என்று குழு குறிப்பிட்டுள்ளது.
- சாட்சியங்களை அழிக்க முயற்சி: தீ விபத்து மற்றும் பணப் புழக்கம் கண்டறியப்பட்ட பிறகு, அந்த இடத்தை முறைப்படி சீல் வைப்பதற்கு முன்பாகவே அங்குள்ள தடயங்களும் பொருட்களும் மாற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான விளக்கங்கள் மழுப்பலாக இருப்பதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
பின்னணி என்ன?
கடந்த ஆண்டு நீதிபதியின் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபட்டின்போது, தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டபோதுதான் கட்டுக்கட்டாகப் பாதி எரிந்த நிலையில் ரூ.500 நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ள விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. இந்தச் சர்ச்சை பூதாகரமாக வெடித்ததைத் தொடர்ந்து, நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தற்போது நாடாளுமன்றக் குழு இச்சம்பவத்தில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளதால், இந்த விவகாரம் நீதித்துறை மற்றும் அரசியல் வட்டாரத்தில் மேலும் தீவிர விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.


