ஓபிஎஸ் அரசியல் பயணம் தமிழக அரசியலில் முக்கியமான திருப்பங்களை கண்டுள்ளது. 1973 முதல் 2026 வரை பல உயர்வு, தாழ்வுகளை அவர் சந்தித்துள்ளார்.
ஆரம்ப காலம்
- 1973 – அ.தி.மு.க.வில் இணைந்தார்.
- 1996–2001 – பெரியகுளம் நகராட்சி தலைவர்.
- 2001 – பெரியகுளம் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ. ஆக தேர்வு.
முதலமைச்சர் பதவிகள்
- 2001 – ஜெயலலிதா சிறை சென்றபோது தமிழகத்தின் 13வது முதலமைச்சராக பதவியேற்றார்.
- 2014–2015 – ஜெயலலிதா மீண்டும் சிறை சென்றபோது இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவி வகித்தார்.
- 2016–2017 – ஜெயலலிதா மறைவிற்கு பிறகு மூன்றாவது முறையாக முதலமைச்சராக செயல்பட்டார்.
அமைச்சரவை மற்றும் எதிர்க்கட்சி
- 2002–2006 – வருவாய் துறை அமைச்சர்.
- 2006–2011 – சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர்.
- 2011–2014 – நிதியமைச்சர்.
- 2017–2021 – துணை முதலமைச்சர்.
முக்கிய அரசியல் திருப்பங்கள்
- 7 பிப்ரவரி 2017 – சசிகலாவிற்கு எதிராக ‘தர்மயுத்தம்’ தொடங்கினார்.
- 21 ஆகஸ்ட் 2017 – எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணைந்தார்.
- 2022 – அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.
- 2024 – NDA கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு 2வது இடம் பெற்றார்.
- 27 பிப்ரவரி 2026 – திமுகவில் இணைந்தார்.
ஓபிஎஸ் அரசியல் பயணம் தமிழக அரசியலில் பல பரபரப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் தொடங்கிய அவரது பயணம், 2026ல் திமுகவில் இணைவதன் மூலம் புதிய கட்டத்தை எட்டியுள்ளது.

