வடகொரியா திடீரென சுமார் 10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது அண்டை நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் கடற்பகுதியை நோக்கி இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா மற்றும் தென்கொரியா இணைந்து நடத்தி வரும் வருடாந்திர கூட்டு ராணுவப் பயிற்சியை கண்டிக்கும் விதமாகவே இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக வடகொரியா தெரிவித்துள்ளது. அந்த ராணுவப் பயிற்சி தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் வடகொரியா குற்றம்சாட்டியுள்ளது.

இந்த நடவடிக்கை காரணமாக ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை நிலைக்கு சென்றுள்ளன. பிராந்திய பாதுகாப்பு சூழ்நிலையை இது மேலும் பதற்றமாக்கும் என சர்வதேச அரசியல் வட்டாரங்கள் கவலை தெரிவித்துள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version