தமிழகத்தில் தவெக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை உயர்தர அதிகாரிகள் மாநாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் தலைமையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு, மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் நிர்வாகத் திறனை மேம்படுத்துவது குறித்து இந்த மாநாட்டில் அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அவர்கள் வழங்கிய அதிரடி உத்தரவுகளின் சாராம்சம்:

🛡️ 1. பெண்களின் பாதுகாப்பில் ‘NO CHANGE & NO COMPROMISE’:

  • “மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பை 100 சதவீதம் உறுதிப்படுத்தியே ஆக வேண்டும். இதில் எவ்வித சமரசமும் (No compromise) கிடையாது. பெண்களின் பாதுகாப்பிற்கு அனைத்து மாவட்டங்களிலும் பிரத்யேக சிறப்பு ஏற்பாடுகளை (Special Arrangements) அதிகாரிகள் செய்ய வேண்டும்” என முதல்வர் மிகக் கடுமையாக உத்தரவிட்டுள்ளார்.

🚫 2. போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு:

  • தமிழகத்தின் மிக முக்கிய சவாலாக உருவெடுத்துள்ள போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் வேரறுக்க வேண்டும். “இளம் தலைமுறையினரைக் சீரழிக்கும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது இரும்புக்கரம் கொண்டு பாய்ந்து, போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க பாடுபட வேண்டும்” என ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

⚖️ 3. சட்டத்தின்படி சுதந்திரமாக முடிவெடுங்கள்:

  • “சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளைப் பொறுத்தவரை, அதிகாரிகள் எவ்வித அரசியல் அழுத்தங்களுக்கும் இடம் தராமல் சட்டத்தின் அடிப்படையில் சுதந்திரமாக முடிவெடுக்கலாம். தவறு செய்தவர்கள் எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும், பாரபட்சமின்றி துரித நடவடிக்கை எடுத்து உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். அதே நேரத்தில், தப்பித்தவறி கூட எந்தவொரு நிரபராதியும் பாதிக்கப்படக் கூடாது” எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

💧 4. மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கே முதலிடம்:

  • “பொதுமக்கள் தங்களின் ரேஷன், கல்வி, குடிநீர், சுகாதாரம், மின்சாரம், மற்றும் சாலை வசதி போன்ற மிக அத்தியாவசியமான அடிப்படைத் தேவைகளுக்காகவே அரசை நாடி வருகிறார்கள். அவர்களுக்கு இந்தச் சேவைகளை எவ்வித தாமதமும் இன்றி முன்னுரிமை கொடுத்து நிறைவேற்ற வேண்டும். திங்கட்கிழமை தவிர மற்ற நாட்களில் அதிகாரிகள் நேரடியாகக் கள ஆய்வு (Field Visit) செய்ய வேண்டும்” என ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

🤝 5. மக்களை இன்முகத்தோடு நடத்துங்கள்:

  • “பட்டா, சான்றிதழ்கள் கேட்டு உங்களிடம் வரும் ஏழை எளிய மக்களை, உங்கள் வீட்டில் உள்ள மனிதர்களைப் போல கனிவோடு நடத்த வேண்டும். மனுக்களை வாங்குவது மட்டுமே ஆட்சியர்களின் வேலை அல்ல; வாங்கிய மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தொடர் கண்காணிப்பு (Follow-up) செய்வதற்கு எனத் தனியாக ஒரு அலுவலரை நியமிக்க வேண்டும்” என்றார்.

🔥 முதல்வரின் பஞ்ச் வரிகள்:

“வெளிப்படையான, நேர்மையான, லஞ்ச லாவண்யமற்ற ஒரு சமூக நீதிக்கான அரசைத் தேர்ந்தெடுத்தே ஆக வேண்டும் என்ற நோக்கில்தான் மக்கள் நம்முடைய அரசைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். மக்களின் அந்த நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் அதிகாரிகளின் செயல்பாடுகள் அமைய வேண்டும்!”

மக்களின் குறைகளை வெறும் காகிதமாகப் பார்க்காமல், அவற்றை உடனுக்குடன் தீர்த்து வைக்கும் ஒரு மக்கள் நலனுக்கான “அதிரடி காரியதரிசியாக” செயல்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அவர்கள் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version