புதுடெல்லி:

இந்திய விவசாயத் துறைக்குத் தேவையான உர விநியோகத்தை தங்குதடையின்றி உறுதி செய்யவும், உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கவும் மத்திய அரசு ஒரு மிக முக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க கொள்கை முடிவை எடுத்துள்ளது.

இயற்கை எரிவாயு அடிப்படையிலான யூரியா உற்பத்தி ஆலைகளில் (Gas-based urea manufacturing units) புதிய முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், “யூரியாவுக்கான தேசிய முதலட்டுக் கொள்கை 2026” (National Investment Policy for Urea 2026 – NIPU-2026) என்ற புதிய கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இக்கொள்கையின் முக்கிய சிறப்பம்சங்கள்:

  • உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு: இப்புதிய கொள்கை மூலம் இந்தியாவில் புதிய யூரியா ஆலைகள் தொடங்குவது ஊக்குவிக்கப்படும். இதனால் உள்நாட்டு உற்பத்தி பலப்படுத்தப்பட்டு, வெளிநாடுகளில் இருந்து யூரியா இறக்குமதி செய்வது பெருமளவு குறைக்கப்படும்.
  • வெளிப்படையான செலவின முறை: அதிக வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரும் நோக்கில், உற்பத்தி ஆலைகளின் நிலையான செலவுகள் (Fixed Costs) மற்றும் மாறும் செலவுகள் (Variable Costs) ஆகியவை தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு கணக்கிடப்படும்.
  • பங்கு ஆதாய வரம்பு (RoE Band): முதலீட்டாளர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் நிலையான வருவாயை உறுதி செய்யும் வகையில், 12% முதல் 16% வரையிலான Return on Equity (RoE) வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • அந்நியச் செலாவணி அபாயக் குறைப்பு: உலகளாவிய சந்தை மாற்றங்களால் ஏற்படும் அந்நியச் செலாவணி பாதிப்புகளைத் (Foreign Exchange Risk) தவிர்க்கும் வகையில், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அப்போதைய மாற்று விகிதங்களின் அடிப்படையில் நிலையான செலவுகள் அனைத்தும் இந்திய ரூபாயாக (INR) மாற்றப்படும்.

இந்திய விவசாயிகளின் உற்ற தோழனான யூரியா உர உற்பத்தியில் நாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இந்த #NIPU-2026 கொள்கை வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை!

Share.
Leave A Reply

Exit mobile version