சென்னை தலைமைச் செயலகத்தில் 6.8.2026 அன்று தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் (TAMCO) தலைவராகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திரு. ஏ.பி. தமீம் அன்சாரி சாகீப் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின் போது, தமது புதிய பொறுப்பிற்கான நியமன ஆணையைப் பகிர்ந்துகொண்ட திரு. ஏ.பி. தமீம் அன்சாரி சாகீப் அவர்கள், சிறுபான்மையின சமூகத்தின் பொருளாதார மேம்பாட்டிற்கான களப்பணிகளை விரைந்து தொடங்குவதற்காக முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டார்.

சிறுபான்மையின மக்களின் தொழில்முனைவு, கடன் உதவிகள் மற்றும் பொருளாதார சுபிட்சத்தை உறுதி செய்யும் பல்வேறு நலத்திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்த இந்த புதிய நியமனம் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது மக்களே!

Share.
Leave A Reply

Exit mobile version