ஆவணத் தயாரிப்பு முதல் அரசு அனுமதிகள் வரை – ஒரே இடத்தில் முழுமையான தீர்வு!
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் திரு. கழுகுமலை கண்ணன் அவர்கள், பொதுமக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினரின் நலனைக் கருத்தில் கொண்டு, கோவில்பட்டியில் “நிலமகள் கன்சல்டன்சி” என்ற புதிய ஆவண எழுத்தர் அலுவலகத்தைத் துவங்கியுள்ளார்.
அமைவிடமும் வசதிகளும்:
இந்த அலுவலகம் கோவில்பட்டி ரயில் நிலையம் எதிரில், சார் பதிவாளர் அலுவலகத்திற்கு மிக அருகில் (கதவு எண் 67சி, மில் தெரு) அமைந்துள்ளதால், ஆவணப் பதிவு மற்றும் நிலம் தொடர்பான பணிகளுக்காக வருவோருக்குப் பெரும் வசதியாக அமையும்.
வழங்கப்படும் முக்கிய சேவைகள்:
இங்கு கிரைய ஆவணம், பாகப்பிரிவினை, விடுதலை ஆவணம், செட்டில்மெண்ட், உயில், பொது அதிகாரம் (GPA) மற்றும் அனைத்து விதமான சட்டபூர்வ ஒப்பந்தங்களும் துல்லியமாகத் தயாரித்து வழங்கப்படுகின்றன. மேலும்:
- அரசு அனுமதிகள்: வருவாய்த்துறை, பதிவுத்துறை, DTCP, நகராட்சி மற்றும் ஊராட்சி துறைகள் மூலம் பெற வேண்டிய அனைத்து அனுமதிகளையும் முறையாகப் பெற்றுத் தரும் சேவையும் வழங்கப்படுகிறது.
- வெளிப்படைத்தன்மை: ரியல் எஸ்டேட் நடைமுறைகளில் நம்பகத்தன்மையையும் சட்டபூர்வ பாதுகாப்பையும் உறுதி செய்வதே இந்நிவனத்தின் முக்கிய நோக்கமாகும்.
தேசியத் தலைவரின் வாழ்த்து:
இந்த புதிய முயற்சியைப் பாராட்டி, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஹென்றி அவர்கள், “இந்த நிறுவனம் கடைக்கோடி மக்களுக்கும் பயனுள்ள வகையில் சேவை செய்து மென்மேலும் வளர வேண்டும்” எனத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

