சென்னை: பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 12 ஆண்டுகால சாதனைகளைப் போற்றும் வகையிலும், அவர் தொடர்ந்து மக்கள் சேவை ஆற்றிட வேண்டியும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.

சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோவிலில் இந்த சிறப்பு தரிசனம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாஜகவின் தேசிய செயலாளரும், தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளருமான அரவிந்த் மேனனும் கலந்துகொண்டனர்.

பிரதமர் மோடியின் மக்கள் நலன் சார்ந்த அர்ப்பணிப்பான ஆட்சிப் பயணம் மென்மேலும் தொடர வேண்டும் என்றும், அவர் தேசத்தை வழிநடத்த இறைவனை பிரார்த்திப்பதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். வழிபாட்டிற்குப் பிறகு, அங்கிருந்த பக்தர்களுக்கு நயினார் நாகேந்திரன் பிரசாதங்களை வழங்கினார்.

Share.
Leave A Reply

Exit mobile version