“வெற்றித் தமிழகம்” இலக்கு எப்படி? ஊரக வளர்ச்சி அலுவலர்களை ஒரே இடத்தில் திரட்டிய அமைச்சர்

சென்னை, 08.10.2026: ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N.ஆனந்த் அவர்கள் தலைமையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் “வெற்றித் தமிழகம் – தொலைநோக்கு ஆவணம்” செயல்திட்ட முன்னெடுப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த முதல் மண்டல மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது.

இம்மாநாட்டில் 11 மாவட்டங்களைச் சேர்ந்த அலுவலர்களுடன் அமைச்சர் கலந்துரையாடினார்.

பங்கேற்ற மாவட்டங்கள்: காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர்.

பங்கேற்ற முக்கிய அதிகாரிகள்:

  • ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலர் திரு. தர்மேந்திர பிரதாப் யாதவ், இ.ஆ.ப.
  • ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்கக ஆணையர் (பயிற்சி) டாக்டர் ஆர்.ஆனந்தகுமார், இ.ஆ.ப.
  • ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்கக ஆணையர் திருமதி வே. அமுதவல்லி, இ.ஆ.ப.
  • தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மேலாண்மை இயக்குநர் மரு. மா. ஆர்த்தி, இ.ஆ.ப.
  • அமைச்சரின் அரசு ஆலோசகர் முனைவர் ஜி. பழனிதுரை
  • கூடுதல் இயக்குநர்கள், தலைமைப் பொறியாளர்கள், இணை இயக்குநர்கள் மற்றும் துறை உயர் அலுவலர்கள்

அரங்கு நிறைந்த அலுவலர்களுடன் நடைபெற்ற இந்த மாநாடு, மழைக்காலத்தை எதிர்கொள்ளும் தயார்நிலையையும், ஊரக வளர்ச்சித் திட்டங்களை ஒருங்கிணைந்து செயல்படுத்துவதையும் மையமாகக் கொண்டிருந்தது. மாவட்டவாரியாகப் பிரிக்கப்பட்ட இருக்கைகளில் அலுவலர்கள் அமர்ந்து பங்கேற்றது, களப்பணிகளை ஒருங்கிணைக்க உதவும் வகையில் அமைந்தது.

உங்கள் கருத்து: பருவமழைக் காலத்தில் உங்கள் ஊராட்சியில் எந்த முன்னேற்பாடு மிக அவசியம் என நினைக்கிறீர்கள்? கமெண்ட்டில் பகிருங்கள்!

Share.
Leave A Reply

Exit mobile version