சென்னை: தனது பிறந்தநாளை முன்னிட்டுப் பேனர்கள் வைப்பதோ அல்லது பொருட்செலவு செய்து விழா நடத்துவதோ வேண்டாம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செப்டம்பர் 22-ஆம் தேதி என் பிறந்தநாளைக் கொண்டாட ராஜா முத்தையா மன்றத்தைப் பதிவு செய்து, முன்பணமும் செலுத்திவிட்டார்கள் இயக்கத் தோழர்கள். பொருட்செலவு செய்து, எனது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுவதை அறிந்து மிகவும் வேதனைப்பட்டேன்.

என் புகைப்படம் போட்ட சுவரொட்டிகளை ஒட்டுவது, பேனர் அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு என் மனதைப் புண்படுத்த வேண்டாம். ‘வைகோ 83’ என்ற தலைப்பில் என் பிறந்தநாள் விழாவைக் கொண்டாட எவரும் முற்பட வேண்டாம்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version