உலகப்புகழ் பெற்ற கார்ட்டூன் கதாபாத்திரமான ‘ஹீமேன்’ (He-Man) கதையை மையமாக வைத்து பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘மாஸ்டர்ஸ் ஆஃப் தி யுனிவர்ஸ்’ (Masters Of The Universe) திரைப்படத்தின் அதிரடி ட்ரெய்லர் இன்று வெளியானது. 90-களில் குழந்தைகளைக் கவர்ந்த இந்த சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தை நீண்ட இடைவேளைக்குப் பிறகு பெரிய திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள கிராபிக்ஸ் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்தத் திரைப்படம் வரும் ஜூலை 5-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆக்‌ஷன் காட்சிகளும், ஹீமேன் மற்றும் ஸ்கெலிட்டர் இடையிலான மோதலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version