செய்தி விவரம் (Content):

மதுரை: தமிழ்நாடு பத்திரப்பதிவுத் துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “வருகையில்லா ஆவணப் பதிவு” (Presenceless Registration) குறித்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சி நிகழ்ச்சி மதுரை மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் (FAIRA) தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், கூட்டமைப்பின் நிர்வாகிகள் பலர் இந்நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

மதுரை மண்டலப் பதிவுத்துறைத் துணைத் தலைவர் (AIG) திரு. செந்தில்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், புதிய பத்திரப்பதிவு முறை, அதன் நடைமுறைச் செயல்பாடுகள், சட்ட அம்சங்கள் மற்றும் தொழில்முறை பயன்பாடுகள் குறித்துப் பதிவுத்துறை அதிகாரிகள் விரிவான விளக்கமளித்தனர்.

நிகழ்வின் நிறைவில், FAIRA கூட்டமைப்பின் சார்பில் பத்திரப்பதிவுத் துறைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இதில் FAIRA-வின் தேசிய இணைச் செயலாளர் JCI Senator ஜெ.கார்மேகம் AME, உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.

Share.
Leave A Reply

Exit mobile version