புதுடெல்லி: நீட் தேர்வு விவகாரம் மற்றும் டெல்லியில் மாணவர்கள் மீது நேற்று நடத்தப்பட்ட தடியடி சம்பவம் குறித்து உடனடி விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இன்று காலை மக்களவை கூடிய சில நிமிடங்களிலேயே, வழக்கமான கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு, மாணவர்கள் மீதான தடியடி குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதனால் அவையில் கடும் கூச்சலும் குழப்பமும் நிலவியது.

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக, அவையை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதால், மக்களவையை மதியம் 12 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

Share.
Leave A Reply

Exit mobile version