மதுரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி சன்னதியில், தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளான சூர்யா மற்றும் ஜோதிகா சிறப்பு சாமி தரிசனம் செய்தனர்.
சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வரும் ‘கருப்பு’ திரைப்படத்தின் வெற்றியை முன்னிட்டு, தம்பதியினர் கருப்பண்ணசாமியை நேரில் வழிபட்டு நன்றி செலுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிகழ்வில், கருப்பு நிற சேலையில் எளிமையான தோற்றத்தில் வந்த ஜோதிகா அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். சூர்யாவுடன் இணைந்து சன்னதியில் கைகளை கூப்பி பக்தியுடன் வழிபட்ட அவர், படத்தின் வெற்றிக்காக இறைவனுக்கு நன்றி செலுத்தியதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
இவர்களுடன் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டனர். சூர்யா – ஜோதிகா தம்பதியினர் கோவிலுக்கு வந்த தகவல் பரவியதும், ஏராளமான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கோவிலில் திரண்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் உற்சாகமான பரபரப்பு நிலவியது.

‘கருப்பு’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடைபெற்ற இந்த பக்தி தரிசனம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.