சென்னை: சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் எளிய தவணை முறை திட்டங்கள் மூலம், தரமான வீட்டுமனைகளை வழங்கி பொதுமக்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கையைப் பெற்றுள்ள ‘கந்தா பிராப்பட்டீஸ் அண்ட் கன்ஸ்ட்ரக்ஷன்’ நிறுவனத்தின் 6-ஆம் ஆண்டு விழா சென்னை தியாகராய நகரில் உள்ள சபரி கிராண்ட் இன் ஹோட்டலில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் (FAIRA) நிறுவனரும், தேசியத் தலைவருமான டாக்டர் ஆ. ஹென்றி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, நிறுவனத்தின் நிர்வாகிகளுக்கும், பணியாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
விழாவில் டாக்டர் ஆ. ஹென்றி பேசியதாவது:
“ஒரு நிறுவனத்தின் உண்மையான வளர்ச்சி என்பது வெறும் வணிக லாபத்தை மட்டும் பொறுத்தது அல்ல; அது பொதுமக்களிடம் பெறும் நம்பிக்கையையும், வழங்கும் நேர்மையான சேவையையும் பொறுத்தது. அந்த வகையில், கந்தா பிராப்பட்டீஸ் நிறுவனம் கடந்த 6 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் சொந்த இல்லக் கனவை நனவாக்கி சாதனை படைத்துள்ளது.”
மேலும், நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களும் எளிதாகச் சொந்த வீட்டுமனை வாங்கும் வகையில், எதிர்காலத்தில் சட்டப்பூர்வ ஆவணங்கள் மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய பல புதிய நவீன குடியிருப்பு திட்டங்களை இந்நிறுவனம் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும், தமிழகத்தின் முன்னணி நிறுவனமாக உயர வேண்டும் என்றும் அவர் வாழ்த்தினார்.
நிறுவனத்தின் 6 ஆண்டுகால சாதனைகளைக் கொண்டாடும் வகையிலும், எதிர்கால இலக்குகளைத் திட்டமிடும் வகையிலும் நடைபெற்ற இந்த உற்சாகமான விழாவில் ரியல் எஸ்டேட் துறை முக்கிய பிரமுகர்கள், தொழில்முனைவோர், வாடிக்கையாளர்கள் மற்றும் நிறுவனத்தின் ஊழியர்கள் எனப் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


