சென்னை: இயக்குநர் எம். ராஜேஷ் மற்றும் நடிகர் ஜீவா கூட்டணியில் உருவாகி வரும் “ஜாலியா இருந்த ஒருத்தன்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தேதி மற்றும் நேரத்தை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் 2009-ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘சிவா மனசுல சக்தி’ (SMS) திரைப்படத்திற்குப் பிறகு, சுமார் 16 ஆண்டுகள் கழித்து இயக்குநர் எம். ராஜேஷ், நடிகர் ஜீவா மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோரது வெற்றிக் கூட்டணி மீண்டும் இந்தத் திரைப்படத்திற்காக இணைந்துள்ளது. மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் தயாரிப்பில் ஜீவாவின் 47-வது படமாக உருவாகி வரும் இந்த கமர்சியல் என்டர்டெய்னர் திரைப்படத்தில் இவானா கதாநாயகியாக நடித்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 6:00 மணிக்கு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நெருங்கிய நண்பர்களான ஜீவா மற்றும் ராஜேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், மீண்டும் ரசிகர்களுக்கு ஒரு பக்காவான காமெடி மற்றும் காதல் கலந்த எண்டர்டெய்னராக அமையும் என சினிமா வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version