சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கூடுதல் கச்சா எண்ணெய் வழங்க தங்களிடம் கையிருப்பு இல்லை என ஈரான் அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

கடலில் முடங்கியுள்ள ஈரானிய எண்ணெய் மீதான தடைகளை 30 நாட்களுக்கு தளர்த்துவதாக அமெரிக்கா அறிவித்திருந்த நிலையில், அந்த சலுகையை ஈரான் நிராகரித்துள்ளது. இந்த முடிவு உலகளாவிய எரிசக்தி சந்தையில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

எண்ணெய் விநியோகம் குறையக்கூடும் என்ற அச்சம் காரணமாக, சர்வதேச சந்தையில் விலை உயர்வு தொடரும் வாய்ப்பு உள்ளது. இந்த நிலைமை, பல நாடுகளின் பொருளாதாரத்துக்கும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version