அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு பகுதியில் கடல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

23,000 மாலுமிகள் கடலில் சிக்கினர்

இந்த நடவடிக்கையால் மத்திய கிழக்கு கடல் பகுதியில் சுமார் 23,000 மாலுமிகள் சிக்கித் தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல நாடுகளின் சரக்கு கப்பல்கள் கடலில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய மாலுமிகளும் பாதிப்பு

இந்த சூழ்நிலையில் 36 இந்திய கப்பல்களில் பயணித்த 1,074 இந்திய மாலுமிகள் கடலில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலைமை இந்தியாவை உட்பட பல நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

போர் பதற்றம் தீவிரம்

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனால் அந்த பகுதியில் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version