நாட்டில் யூரியா உரத்தின் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கில், சீனாவில் இருந்து யூரியா இறக்குமதி செய்வது குறித்து இந்தியா அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விவசாயத் தேவையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை ஒன்றிய அரசு முன்னெடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய கிழக்கு பகுதிகளில் நிலவி வரும் போர் சூழ்நிலை காரணமாக இயற்கை எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இயற்கை எரிவாயு உர உற்பத்திக்கான முக்கிய மூலப்பொருளாக இருப்பதால், அதன் விநியோகம் குறைந்தால் இந்தியாவில் உர உற்பத்தியும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

இதனால் எதிர்காலத்தில் யூரியா கிடைப்பில் சிக்கல் உருவாகும் சூழ்நிலை ஏற்படாமல் தடுக்க, மாற்று வழிகளை ஆராயும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக உலகின் முக்கிய உர உற்பத்தி நாடுகளில் ஒன்றான சீனாவுடன் யூரியா இறக்குமதி தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நடவடிக்கை மூலம் விவசாயிகளுக்கு தேவையான அளவில் உரம் கிடைப்பதை உறுதி செய்யவும், விவசாய உற்பத்தியில் எந்தவித தடையும் ஏற்படாமல் பாதுகாக்கவும் அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version