தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை (PWD) மானியக் கோரிக்கை 2026-27-இல் அறிவிக்கப்பட்டுள்ள 3 முக்கிய சிறப்பம்சங்கள்:

📌 முக்கிய அறிவிப்புகள்:

🏙️ நகர்ப்புறங்களில் உலகத் தரமான பன்னடுக்கு அரசு கட்டடங்கள்:

இனிவரும் காலங்களில் நகர்ப்புறப் பகுதிகளில் பொதுப்பணித் துறை மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்துக் கட்டுமானப் பணிகளும், ‘தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகள், 2019’ (TNCDB Rules, 2019) படி அனுமதிக்கத்தக்க அதிகபட்ச Premium FSI-ஐ முழுமையாகப் பயன்படுத்தி அமைக்கப்படும்.

பல்வேறு அரசுத் துறைகளை ஒருங்கிணைத்து, எழில்மிகு மற்றும் உலகத் தரத்திலான பன்னடுக்கு அரசு கட்டடங்களாக மாற்றப்படும்.

👷‍♂️ பொறியியல் பட்டதாரிகளுக்குப் புதிய வாய்ப்பு:

ரூ. 1 கோடி வரை திட்ட மதிப்பீடு கொண்ட பொதுப்பணித் துறை ஒப்பந்தங்களில், வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கும் தகுதிவாய்ந்த வேலையற்ற பொறியியல் பட்டதாரிகளுக்கு (Unemployed Engineering Graduates) சலுகையுடன் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும்.

🏗️ ரூ. 1 கோடி தொகுப்பு நிதியில் புதிய கட்டுமானக் கழகம்:

தமிழ்நாடு உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானக் கழகம் (Tamil Nadu Infrastructure and Construction Corporation) நிறுவப்படும்.

செயல்பாடுகள்:

₹200 கோடிக்கு மேற்பட்ட அரசு கட்டடப் பணிகளை மேற்கொள்வது.

பயன்படுத்தப்படாத அரசு நிலங்களில் வருவாய் உருவாக்கும் வகையில் கட்டடங்களை உருவாக்குவது.

தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்குத் தேவையான கட்டடம் கட்டுவதற்கு கோரப்படும் ஒப்பந்தங்களில் பங்கேற்பது.

Share.
Leave A Reply

Exit mobile version