தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் பேசிய உரையின் எந்தப் பகுதியையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது எனச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் திட்டவட்டமாக அறிவித்ததைத் தொடர்ந்து பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது.

விதிகளுக்கு உட்பட்ட உண்மைகளையே முதல்வர் பேசியுள்ளார் என்றும், ஏற்கனவே பல தலைவர்களால் விவாதிக்கப்பட்ட பழைய விஷயங்களே அவை என்றும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார். மேலும், திமுக சார்பில் பேச வாய்ப்பளித்தும் அவையில் கூச்சலிட்டு நாடகமாடிய திமுக சட்டமன்ற உறுப்பினர்களை, அவைக்காவலர்கள் (Marshals) குண்டுக்கட்டாகத் தூக்கி வெளியேற்றிய சம்பவம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

📌 சட்டப்பேரவையில் நடந்தது என்ன? — முக்கியச் சம்பவங்கள்:

  • 🗣️ சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அதிரடி தீர்ப்பு: நேற்று முதல்வர் விஜய் பேசிய கருத்துக்கள் அனைத்தும் பேரவை விதிகளுக்கு உட்பட்டவை; அதில் பொயோ அல்லது தவறோ ஏதும் இல்லை. ஏற்கனவே பல தலைவர்களால் அவையில் விவாதிக்கப்பட்ட கருத்துக்கள் என்பதால் எதையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது எனச் சபாநாயகர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
  • 🎙️ பேச வாய்ப்பளித்தும் தொடர்ந்த கூச்சல்: திமுக கொறடா, ஏ.வ. வேலு தனது தரப்பு நியாயத்தைப் பேசச் சபாநாயகர் அனுமதி அளித்தபோதிலும், திமுகவினர் தொடர்ந்து அவையில் கூச்சலிட்டு, முதல்வரின் உரையை நீக்கக்கோரி திட்டமிட்டு முழக்கங்களை எழுப்பினர்..
  • 🛑 சபாநாயகர் இருக்கை முற்றுகை & தர்ணா: சபாநாயகரின் முடிவைக் கண்டித்து கொதித்தெழுந்த திமுக உறுப்பினர்கள் அனைவரும் சபாநாயகர் இருக்கையைச் சூழ்ந்து கொண்டு, அவையின் மையப் பகுதியிலேயே அமர்ந்து தொடர் முழக்கங்களை எழுப்பினர்.
  • 🚨 அவைக்காவலர்கள் அதிரடி நடவடிக்கை: அவையின் ஒழுங்கையும் கண்ணியத்தையும் பராமரிக்க திமுக உறுப்பினர்களை உடனடியாக வெளியேற்றுமாறு அவைக்காவலர்களுக்குச் சபாநாயகர் உத்தரவிட்டார்.
  • 🥊 குண்டுக்கட்டாக வெளியேற்றம்: உத்தரவை அடுத்து அவைக்குள் விரைந்த பாதுகாப்புப் படையினர் மற்றும் அவைக்காவலர்கள், எதிர்ப்பையும் மீறி திமுக உறுப்பினர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கி வெளியேற்றினர்.
Share.
Leave A Reply

Exit mobile version