அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் (FAIRA) நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி அவர்கள், உலகெங்கிலும் வாழும் இஸ்லாமிய சகோதரர், சகோதரிகளுக்கு இதயம் கனிந்த ரமலான் (ஈத்) பெருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

“ரமலான் மாதம் என்பது ஒழுக்கம், பொறுமை, பக்தி மற்றும் மனிதநேயத்தின் உச்சத்தை உணர்த்தும் புனித காலமாகும். நோன்பு, ஜகாத், தர்மம் போன்ற உயர்ந்த செயல்களின் மூலம் மனிதன் தனது வாழ்வை சீரமைக்கும் அரிய வாய்ப்பாக இது அமைகிறது. பசி பட்டவர்களின் வலியை உணர்ந்து உதவும் மனப்பான்மை, சகோதரத்துவம் மற்றும் அன்பை வளர்க்கும் புனித மாதம் இதுவாகும்.

இந்த புனித நாளில், சாதி, மதம், மொழி, அரசியல் எல்லைகளை கடந்து அனைவரும் ஒன்றிணைந்து அமைதி, அன்பு, மனிதநேயத்தை நிலைநாட்ட வேண்டும். உலகம் முழுவதும் அமைதி நிலவிடவும், போர்கள் நிறுத்தப்படவும் நாம் அனைவரும் பிரார்த்திக்க வேண்டிய அவசியம் இன்று அதிகமாக உள்ளது.

இந்த ரமலான் பெருநாள் அனைவருக்கும் ஆரோக்கியம், செழிப்பு, அமைதி மற்றும் மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என டாக்டர் ஆ. ஹென்றி தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version