சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த மூன்று நாட்களில் கணிசமாக குறைந்துள்ளது.
மூன்று நாட்களில் மட்டும் ஒரு சவரன் தங்கம் ரூ.5,600 வரை சரிந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் ரூ.1,21,600க்கு விற்பனையாகிறது.
எதிர்பார்ப்புக்கு மாறாக சரிவு
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக தங்கத்தின் விலை உயரும் என பலர் எதிர்பார்த்தனர்.
ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கு மாறாக தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
இந்த திடீர் விலை சரிவு தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.


