சிவகாசி / விருதுநகர்:

“ஒரு நகரத்தை நிர்வகிப்பது என்பது சாலைகள் மற்றும் கட்டிடங்களை உருவாக்குவது மட்டுமல்ல; மக்களின் உயிரையும், நம்பிக்கையையும், எதிர்காலத்தையும் பாதுகாக்கும் அமைப்புகளை உருவாக்குவதும் ஆகும்” என்ற உன்னத நோக்கோடு சிவகாசியின் மருத்துவக் கட்டமைப்பில் ஒரு மிகப்பெரிய புரட்சிகரமான திட்டத்திற்கு வித்திடப்பட்டுள்ளது.

மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், பட்டாசுத் தொழிலில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் “Comprehensive Firecracker Accident Management System” தொடர்பான விரிவான திட்ட அறிக்கை (DPR), மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரிடம் அதிகாரப்பூர்வமாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மெகா திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் மற்றும் சிறப்பம்சங்கள்:

  • பிராந்திய அவசர மருத்துவ வலையமைப்பு: சிவகாசி – விருதுநகர் – மதுரை ஆகிய மூன்று முக்கிய நகரங்களையும் ஒருங்கிணைத்து, ஒரு நவீன பிராந்திய தீக்காய சிகிச்சை மற்றும் அவசர மருத்துவ வலையமைப்பை (Regional Burn Care and Emergency Medical Network) உருவாக்குவதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
  • ஒருங்கிணைந்த முன்னோடி சிகிச்சை முறை: விபத்து நடைபெறும் நொடியிலிருந்து அவசர சிகிச்சை, மேம்பட்ட தீக்காய சிகிச்சை (Advanced Burn Care), மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை (Reconstructive Surgery), புனர்வாழ்வு மற்றும் தொடர் மருத்துவக் கண்காணிப்பு வரை அனைத்தையும் ஒரே குடையின் கீழ் வழங்கும் முன்னோடி முயற்சியாக இது அமையும்.
  • இந்தியாவிற்கே முன்னுதாரணம்: சிவகாசியின் எதிர்காலத்தைத் தொழில் வளர்ச்சியோடு மட்டுமின்றி, உலகத் தரத்திலான சுகாதாரக் கட்டமைப்போடும் இணைத்து, தொழில் பாதுகாப்பு மற்றும் அவசர சுகாதார மேலாண்மையில் சிவகாசியை இந்தியாவிற்கே ஒரு சிறந்த முன்னுதாரண நகரமாக மாற்றுவது இத்திட்டத்தின் இலக்காகும்.

சிவகாசி பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கும், உயிர் பாதுகாப்புக்கும் உன்னத அரணாக அமையவிருக்கும் இந்த அதிநவீன மருத்துவ வலையமைப்புத் திட்டம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டுதலையும் பெற்று வருகிறது!

Share.
Leave A Reply

Exit mobile version