டோல் கேட்களில் முழு டிஜிட்டல் முறை அமல்
FASTag இல்லையெனில் அதிக கட்டணம் விதிப்பு
நெடுஞ்சாலைகளில் டோல் வசூலில் புதிய மாற்றம் அமலுக்கு வருகிறது. வரும் ஏப்ரல் 10ம் தேதி முதல், டோல் கேட்களில் பணமாக கட்டணம் செலுத்தும் நடைமுறை நிறுத்தப்பட உள்ளது.
FASTag கட்டாயம்
இனி அனைத்து வாகனங்களும் FASTag மூலம் மட்டுமே டோல் கட்டணம் செலுத்த வேண்டும். UPI வசதி இருந்தாலும், FASTag இல்லாமல் UPI மூலம் கட்டணம் செலுத்தினால், வழக்கமான கட்டணத்தை விட 25% கூடுதல் தொகை வசூலிக்கப்படும்.
அரசு அதிகாரிகளுக்கும் விதி
முன்பு ஐடி கார்டு காட்டி டோல் கட்டணம் செலுத்தாமல் சென்ற அரசு மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கும் இந்த சலுகை நீக்கப்பட்டுள்ளது. அரசு வாகனங்களுக்கு மட்டுமே சில விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு அறிவுரை
நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் முன், FASTag செயல்பாட்டில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் கூடுதல் கட்டணமும் தாமதமும் சந்திக்க வேண்டியிருக்கும்

