சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், ரூ.50,000-க்கு மேல் பணத்தை உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்றால் அது பறிமுதல் செய்யப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பணம் எடுத்துச் செல்லும் போது அதன் பயன்பாடு மற்றும் மூலத்தை விளக்கும் ஆவணங்கள் கட்டாயமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் காலத்தில் பணப் பரிவர்த்தனைகள் மூலம் வாக்காளர்களை பாதிக்க முயற்சிகளை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மாநிலம் முழுவதும் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.


