வாஷிங்டன்: அமெரிக்க வெள்ளை மாளிகையில் தொழில்நுட்ப நிறுவனங்களின் முன்னணி சி.இ.ஓ-க்களுடன் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சையைக் குறிப்பிட்ட விதமும் அதற்குக் கிடைத்த பதிலடியும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சம்பவத்தின் பின்னணி & ஜாலி விவாதம்:
- டிரம்பின் ஜாலி கமெண்ட்: செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், சுந்தர் பிச்சையை நோக்கி “சுந்தர், நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?” எனக் கேட்டார். அவர் பேசத் தொடங்கும் முன் குறுக்கிட்ட டிரம்ப், “இவர்கள் உலகிலேயே மிகப்பெரிய மனிதர்கள். இந்த ஆள் (சுந்தர் பிச்சை) ஒரு ‘மான்ஸ்டர்’ (Monster – தொழில் நுட்ப உலகில் அசுர சக்தி கொண்டவர் என்ற அர்த்தத்தில்), ஆனால் இவரை யாருக்கும் தெரியாது! ஊடகங்களின் கேள்விக்கணைகளைச் சந்திக்காமல் அமைதியாக ‘மான்ஸ்டர்’-ஆக வாழ்வது எவ்வளவு பெரிய வாழ்க்கை!” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
- சுந்தர் பிச்சையின் சாதுரியமான பதில்: டிரம்பின் இந்தக் கருத்தைக் கேட்டுப் புன்னகைத்த சுந்தர் பிச்சை, “நான் ஒரு மான்ஸ்டர் என்பத் காட்டிலும் எனக்கு நல்ல ஒரு டேக்லைன் கிடைக்கும் என நம்புகிறேன்!” (Hopefully a better tagline than I’m a monster!) என நகைச்சுவையாகப் பதிலளித்தார்.
- சமூக வலைதளங்களில் வைரல்: தொழில்நுட்பத் துறையில் பிரம்மாண்ட ஆதிக்கம் செலுத்தும் நிறுவனத் தலைவர்களைக் குறிப்பிடும் வகையில் டிரம்ப் ‘Monster’ என்ற வார்த்தையைப் பயன்படுத்திய சூழலில், இருவரின் இந்த சுவாரஸ்யமான உரையாடல் வீடியோ தற்போது உலக அளவில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.


