தூபே 2 பவுண்டரிகள் குறித்து ஜஸ்ப்ரித் பும்ரா முக்கியமாக பேசினார். மே.இ.தீவுகளை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறிய பிறகு அவர் பேட்டி அளித்தார்.
“19வது ஓவரில் தூபே விளாசிய 2 பவுண்டரிகளுக்கு பெரிய அளவில் பாராட்டு கிடைக்காது. ஆனால் கிரிக்கெட் தெரிந்த அனைவருக்கும் தெரியும். கடைசி ஓவரில் அழுத்தம் குறைவதற்கு அந்த 2 பவுண்டரிகள்தான் காரணம்” என பும்ரா கூறினார்.
திருப்புமுனை தருணம்
தூபே 2 பவுண்டரிகள் போட்டியின் போக்கை மாற்றிய தருணமாக அமைந்தது. அதனால் கடைசி ஓவரில் இந்திய அணிக்கு நிம்மதி ஏற்பட்டது.
அணியின் ஒருங்கிணைப்பு
பும்ரா மேலும், அணியின் ஒற்றுமை மற்றும் அழுத்தத்தை சமாளிக்கும் திறன் தான் வெற்றிக்குக் காரணம் என தெரிவித்தார்.


