ஆளுநர் மாளிகை அல்ல, சட்டசபையே பெரும்பான்மையை நிரூபிக்கும் இடம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக-வை ஆட்சி அமைக்க அழைக்காமல் ஆளுநர் தாமதிப்பது, மக்களின் தீர்ப்பைப் புறக்கணிக்கும் செயல் என டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

டாக்டர் ஆ.ஹென்றியின் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள்:

  • மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு: ஒரு கட்சி 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என்பது மக்களின் தெளிவான ஆதரவைக் காட்டுகிறது. அந்தப் பெரும் சக்தியை ஆட்சி அமைக்க அழைக்காமல் இருப்பது ஜனநாயகத்தின் அடித்தளத்தையே அசைப்பதாகும்.
  • சட்டசபையே களம் (Floor Test): இந்திய அரசியலமைப்பின்படி, ஒரு கட்சிக்கு அல்லது கூட்டணிக்குப் பெரும்பான்மை இருக்கிறதா இல்லையா என்பதை ஆளுநர் மாளிகையில் முடிவு செய்யக் கூடாது. அதைச் சட்டமன்ற அரங்கில் நடைபெறும் Floor Test (நம்பிக்கை வாக்கெடுப்பு) மூலமே நிரூபிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
  • ஜனநாயக நடைமுறை: தனியாகவோ அல்லது மற்ற கட்சிகளுடன் இணைந்தோ பெரும்பான்மையை நிரூபிக்கத் தனிப்பெரும் கட்சிக்கு ஆளுநர் உடனடியாக வாய்ப்பளிக்க வேண்டும் என்பதே முறையான ஜனநாயகப் பண்பு என அவர் வலியுறுத்தியுள்ளார்.
Share.
Leave A Reply

Exit mobile version