சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10.30 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துவது, மாவட்ட அளவிலான பிரசார திட்டங்கள், கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைப்பு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு நடைபெறும் இந்த கூட்டம் திமுகவின் தேர்தல் திட்டங்களை வகுப்பதில் முக்கியத்துவம் பெறும் என அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.


