தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு தொடர்பான முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஒப்பந்தம் கையெழுத்து
இந்த ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திடப்பட்டது.
இதன் மூலம் திமுக – காங்கிரஸ் கூட்டணி தேர்தலுக்கான தயாரிப்பை தொடங்கியுள்ளது.
மாநிலங்களவை இடமும் ஒதுக்கீடு
காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை இடமும் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் கூட்டணி அரசியலில் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.


