சென்னை: 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர்களைப் பதிவு செய்யும்போது, அவர்களின் பிறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளவாறே துல்லியமாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் விரிவான சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

முக்கிய அறிவுறுத்தல்கள்:

  • பிறப்புச் சான்றிதழ் விவரங்கள்: மாணவர்களின் பெயர் மற்றும் விவரங்கள் அனைத்தும் அவர்களின் பிறப்புச் சான்றிதழில் உள்ளது போன்று எந்தவித மாற்றமுமின்றி பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
  • புள்ளி (Dot) வைக்கக் கூடாது: பெயர் மற்றும் இனிஷியல் (Initial) ஆகியவற்றுக்கு இடையே ‘புள்ளி’ (Dot) வைக்காமல் இடைவெளி விட்டு மட்டுமே எழுதப்பட வேண்டும்.
  • ஆசிரியர்களே பொறுப்பு: மாணவர்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும்போது ஏதேனும் தவறுகள் அல்லது குளறுபடிகள் ஏற்பட்டால், அதற்குச் சம்மந்தப்பட்ட வகுப்பு ஆசிரியரும் (Class Teacher) மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியருமே (Headmaster) முழுப் பொறுப்பாவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது

Share.
Leave A Reply

Exit mobile version