புதுடெல்லி: மத்திய அரசு நடத்திய நீட் மற்றும் இதர போட்டித் தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்யக் கோரி, ‘காக்ரோஜ் ஜனதா கட்சி’ (CJP) சார்பாக பாயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் திரண்டு பிரம்மாண்ட போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அபிஜித் தீப்கே தலைமையிலான இந்த இயக்கத்தின் பேரணி, ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்ல முயன்றபோது தடுப்புகளை அமைத்து காவல்துறை தடுத்தது. இருப்பினும், போராட்டக்காரர்கள் தடுப்புகளை உடைத்துக் கொண்டு முன்னேற முயன்றதால், காவல்துறையினர் தடிப்படி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் அவர்களைக் கலைக்க முயன்றனர். இதனால் அப்பகுதியில் கடுமையான தள்ளுமுள்ளுவும் பதற்றமும் நிலவியது.

போராட்டத்தின் உச்சகட்டமாக, டெல்லியின் முக்கியப் பகுதிகளில் இணைய சேவை தற்காலிகமாக முடக்கப்பட்டு போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டன. தேர்வு முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், வினாத்தாள் கசிவைத் தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மிகப்பெரிய போராட்டத்தை இளைஞர்கள் முன்னெடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version