இன்று சந்திர பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம்பெயர்கிறார். இன்று சோம பிரதோஷம் மற்றும் சித்த யோகம் கூடி வருவதால், மாலை வேளையில் சிவபெருமானுக்கு நந்தி பகவானுக்கும் நடைபெறும் பிரதோஷ வழிபாட்டில் பங்கேற்பது சகல தோஷங்களையும் நீக்கி நற்பலன்களைத் தரும்.

ராசிபலன் சுருக்கம்
மேஷம்இலக்குகளை அடைய அதிக கவனம் தேவைப்படும். குடும்பப் பிரச்சினைகளால் சற்று மன அழுத்தம் ஏற்படலாம்; நிதானம் அவசியம்.
ரிஷபம்வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ள சிறப்பான நாள். புதிய நண்பர்களின் அறிமுகமும், பழைய ஒப்பந்தங்கள் முடிவடைவதும் மகிழ்ச்சி தரும்.
மிதுனம்சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சிலும் செயலிலும் கூடுதல் கவனம் தேவை. சவால்களைப் பொறுமையுடன் கையாண்டால் வெற்றி நிச்சயம்.
கடகம்உத்தியோகத்தில் சிறு நிதி இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கை தேவை. தேவையற்ற வாக்குறுதிகளைத் தவிர்க்கவும்.
சிம்மம்மகிழ்ச்சியான நாள்! குடும்பத்துடன் வெளியூர் பயணம் அல்லது விருந்து விசேஷங்களில் பங்கேற்கும் வாய்ப்பு அமையும்.
கன்னிசமூகப் பணிகளில் அங்கீகாரம் கிடைக்கும். உடல்நலத்தில் சிறு ஏற்ற இறக்கங்கள் வரலாம் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் தேவை.
துலாம்திறமைகள் வெளிப்படும் நாள். அலுவலகத்தில் உங்கள் பணிகளுக்கு உரிய மதிப்பு கிடைக்கும்; நட்பு வட்டாரம் விரிவடையும்.
விருச்சிகம்பூர்வீக சொத்து விவகாரங்களில் நல்ல முடிவு கிடைக்கும். பிள்ளைகளின் முன்னேற்றம் கண்டு பெருமிதம் கொள்வீர்கள்.
தனுசுதுணிச்சலான முடிவுகள் லாபத்தைத் தரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் இருந்த தடைகள் நீங்கும்.
மகரம்ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்களுடன் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
கும்பம்வராத கடன்கள் வசூலாகும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
மீனம்திட்டமிட்ட காரியங்கள் தடையின்றி முடியும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கான பேச்சுகள் முன்னேற்றமடையும்.
Share.
Leave A Reply

Exit mobile version