சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி ரசிகர்களுக்காக ‘ROAR ‘26’ என்ற பெயரில் மாபெரும் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி மார்ச் 22ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சிறப்பு நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசைக் கச்சேரி இடம்பெற உள்ளது. மேலும் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர்களான சுரேஷ் ரெய்னா, மேத்யூ ஹெய்டன், முரளி விஜய் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை வரும் மார்ச் 15ஆம் தேதி தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சிஎஸ்கே ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி மிகப் பெரிய அளவில் நடத்தப்பட உள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version