சென்னை: பெண்களுக்கு அவசரக் காலங்களில் உடனடியாக உதவும் வகையில், அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட புதிய வாகனங்கள் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு’ வழங்கப்பட்டுள்ளன. சென்னை எழும்பூரில் நடைபெற்ற விழாவில், இந்த வாகனங்களின் பயன்பாட்டை மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் முறைப்படி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

மேலும், ஒரு சுவாரசிய நிகழ்வாக, பெண்களின் பாதுகாப்புக்காக வடிவமைக்கப்பட்ட அந்த பிரத்யேக வாகனத்தை முதலமைச்சரே நேரில் இயக்கி (Drive), அதன் பயன்பாட்டைத் தொடங்கி வைத்தார். இந்த அதிரடிப்படை வாகனங்கள் இனி தமிழ்நாட்டின் முக்கியப் பகுதிகள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் பெண்களின் பாதுகாப்புக்காகத் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version