தமிழ்நாட்டில் பால் உற்பத்தியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்படுவதாகச் சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்:

  • கொள்முதல் விலை உயர்வு: பால் கொள்முதல் விலை 1 லிட்டருக்கு ரூ.38-ல் இருந்து ரூ.41 ஆக உயர்த்தப்படுகிறது. கூட்டுறவு சங்கம் மூலமாக 1 ரூபாயும், அரசின் ஊக்கத்தொகை 3 ரூபாயில் இருந்து 5 ரூபாயாக உயர்த்தப்பட்டும் இந்த விலை உயர்வு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
  • பயனாளிகள்: தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பால் வழங்கி வரும் 3 லட்சத்து 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் இந்த விலை உயர்வால் நேரடியாகப் பலனடைவார்கள்.
  • அரசுக்குக் கூடுதல் செலவு: இந்த கொள்முதல் விலை உயர்வினால் அரசுக்குக் கூடுதல் செலவினமாக மாதந்தோறும் ரூ.30 கோடியும், ஆண்டுதோறும் ரூ.360 கோடியும் செலவாகும் என முதலமைச்சர் தெரிவித்தார்.
  • வாழ்வாதாரப் பாதுகாப்பு: கடந்த சில ஆண்டுகளாகப் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படாத நிலையிலும், பால் உற்பத்தியாளர்களின் உழைப்பிற்கு உரிய மதிப்பளித்து அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் நிதி நெருக்கடியிலும் இ முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பால் உற்பத்தியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த கொள்முதல் விலை உயர்வு கிராமப்புறப் பொருளாதாரத்திற்கும் பால் உற்பத்தியாளர்களுக்கும் பெரும் உறுதுணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version