சென்னை:
2024-ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படங்களுக்கான 72-வது தேசிய திரைப்பட விருதுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பல்வேறு பிரிவுகளில் 10 தேசிய திரைப்பட விருதுகளை வென்று தமிழ்த் திரையுலகம் அசாத்திய சாதனை படைத்துள்ளது.
தமிழ்த் திரையுலகிற்குப் பெருமை சேர்த்துள்ள இந்தச் சாதனையாளர்கள் அனைவருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் வாழ்த்துப் பெற்றுள்ள முக்கிய சாதனையாளர்கள் மற்றும் விருது விபரங்கள்:
- நடிகர் தனுஷ்: இவர் இயக்கி நடித்த “ராயன்” திரைப்படத்திற்காகச் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதையும், “கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் நடித்ததற்காகச் சிறப்புப் பிரிவில் சிறந்த நடிகருக்கான விருதையும் வென்றுள்ளார்.
- இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி: “அமரன்” திரைப்படத்தை நேர்த்தியாக இயக்கியதற்காக இவருக்குச் சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- கேப்டன் மில்லர் திரைப்படம்: சமூக மற்றும் சுற்றுச்சூழல் விழுமியங்களை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை இப்படம் வென்றுள்ளது.
- இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார்: “அமரன்” திரைப்படத்திற்காகச் சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதைத் தட்டிச் சென்றுள்ளார்.
- படத்தொகுப்பாளர் திரு. ஆர். கலைவாணன்: “அமரன்” திரைப்படத்திற்காகச் சிறந்த படத்தொகுப்பிற்கான (Editing) விருதைப் பெற்றுள்ளார்.
- மகாராஜா திரைப்படம்: இப்படத்திற்காகத் திரு. அனல் அரசு அவர்களுக்குச் சிறந்த சண்டைப் பயிற்சி ஆசிரியருக்கான விருதும், செல்வி சாச்சனா நமிதாஸ் அவர்களுக்குச் சிறந்த துணை நடிகைக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- மெய்ப்பழகன் திரைப்படம்: ஒலிப்பதிவில் சிறந்து விளங்கியதற்காகத் திரு. சுரேஷ் ஜி அவர்களுக்குச் சிறப்புப் பிரிவில் சிறந்த ஒளிக்கலவைக்கான (Sound Mixing) விருது கிடைத்துள்ளது.
- ஹரிஹர சுதன் (குறும்புடம்): “ப்ளூ” (Pblue) என்ற குறும்புடத்திற்காகச் சிறந்த ஒலி வடிவமைப்புக்கான (Sound Design) விருதை இவர் வென்றுள்ளார்.
10 தேசிய விருதுகளை வென்று தமிழ்த் திரையுலகம் படைத்துள்ள இந்த வரலாற்றுச் சாதனை ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பெருமைக்குரியது எனக் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், வருங்காலங்களில் தமிழ்த் திரையுலகம் மேலும் பல விருதுகளைப் பெற்றிட வேண்டும் எனத் தனது வாழ்த்துகளைக் கூறி அரவணைத்துள்ளார்!


