மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் முதன்மையான நீதிமன்ற மொழியாகத் தமிழை அங்கீகரிக்கக் கோரியும், நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் உத்தரவுகள் அனைத்தும் தமிழில் கிடைக்கப் பெறுவதற்கான கட்டமைப்பை உருவாக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (03.09.2026) அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார்.
இத்தீர்மானம் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
📌 தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள் & ஒன்றிய அரசுக்கான கோரிக்கைகள்:
- ⚖️ தமிழ் முதன்மை வழக்கு மொழியாக வேண்டும்:மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் முதன்மையான நீதிமன்ற மொழியாகத் (Official Court Language) தமிழ் மொழியை அங்கீகரிக்க ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- 📜 தீர்ப்புகள் தமிழில் கிடைக்கப் பெற வேண்டும்:உயர்நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்புரைகள், தீர்ப்பாணைகள் மற்றும் பிற நீதிமன்ற உத்தரவுகள் அனைத்தும் தமிழ் மொழியிலேயே வழங்கப்படும் வகையிலான உட்கட்டமைப்புகளையும் தொழில்நுட்ப மாற்றங்களையும் உருவாக்க வேண்டும்.
- 🏛️ அரசியலமைப்புச் சட்டப் பிரிவு நடவடிக்கை:இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு Article 348(2) மற்றும் ஆட்சி மொழிகள் சட்டம் (Official Languages Act, 1963) பிரிவு 7 ஆகியவற்றின் கீழ் மாநில ஆளுநரால் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ள முன்மொழிவுகளின் மீது ஒன்றிய அரசு உடனடியாகச் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


