சென்னை: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், இன்று காலை முதலே பல்வேறு மாவட்டங்களில் திடீரென வானிலை மாறியுள்ளது. இதன் காரணமாகச் சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்திற்கு (பிற்பகல் 1 மணி வரை) மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மழை பெய்ய வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள்:
வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையின்படி, பின்வரும் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும்:
- சென்னை & புறநகர் பகுதிகள்
- திருவள்ளூர்
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- ராணிப்பேட்டை
- வேலூர்
- திருப்பத்தூர்
- திருவண்ணாமலை
- விழுப்புரம்
- கடலூர்
- தருமபுரி
- கிருஷ்ணகிரி
வானிலை எச்சரிக்கை: திடீர் வானிலை மாற்றம் காரணமாக இந்த மாவட்டங்களின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்பதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.


