செய்தி விவரம்:

சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பிற்கு ஏற்ப, எண்ணெய் நிறுவனங்கள் தினமும் எரிபொருள் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், தலைநகர் சென்னையில் இன்றைய (சூலை 28) பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 100.75-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ. 92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

எண்ணெய் நிறுவனங்களின் இந்த விலை அறிவிப்பால், வாகன ஓட்டிகள் தங்களது தினசரி பயணத் தேவைகளுக்கு ஏற்ப எரிபொருளை நிரப்பி வருகின்றனர். முக்கிய நகரங்களில் மாவட்ட அளவிலான வரிகள் மற்றும் போக்குவரத்து செலவுகளுக்கு ஏற்ப இந்த விலையில் சிறு மாறுதல்கள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version