கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்து வந்த தங்கம் விலை, வாரத்தின் முதல் நாளான இன்று (திங்கள்கிழமை) அதிரடியாகக் குறைந்து நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கு போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,19,600-க்கு விற்பனையாகிறது.

கிராமுக்கு ரூ.100 குறைந்துள்ளதால், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.14,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சனிக்கிழமை சவரன் ரூ.1,20,400-க்கு விற்பனையான நிலையில், இன்று இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளது. அதே சமயம், 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.109 குறைந்து ரூ.16,309-ஆக உள்ளது. வெள்ளி விலையைப் பொறுத்தவரை பெரிய மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.290-க்கு விற்பனையாகிறது.

மத்திய கிழக்கு நாடுகளில் போர் சூழல் நிலவி வந்தாலும், இன்று ஏற்பட்டுள்ள இந்த விலை சரிவு தங்கம் வாங்கக் காத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகக் கருதப்படுகிறது. வரும் நாட்களில் விலை மேலும் குறையுமா அல்லது மீண்டும் உயருமா என்பதை உலகளாவிய வர்த்தக நிலவரங்களே தீர்மானிக்கும் என சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version