சென்னை:
மேட்டூர் அணைக்குக் கர்நாடகத்தில் இருந்து வர வேண்டிய நீரளவு குறைந்திருக்கும் சூழலில், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் குறுவை/சம்பா பயிர்களையும் பாதுகாக்கும் நோக்கில் மாண்புமிகு தமிழக அரசு உடனடியாகக் களத்தில் இறங்கியுள்ளது.
இன்று (20.07.2026) சென்னை தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையில் உச்சகட்ட அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
- நீர்வராத சூழல் குறித்து ஆய்வு: கர்நாடக மாநிலத்தில் இருந்து மேட்டூர் அணைக்கு உரிய நீர் திறந்து விடப்படாத நிலையிலும், போதிய நீர்வரத்து இல்லாத சூழலிலும் தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டிய அவசரகால நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
- மேகதாது அணை விவகாரம்: காவிரியின் குறுக்கே கர்நாடகம் மேகதாது அண கட்ட முயலும் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை உறுதியோடு நிலைநாட்டுவது தொடர்பாகவும், சட்டரீதியான அணுகுமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
- சட்ட வல்லுநர்கள் ஆலோசனை: இக்கூட்டத்தில் மூத்த சட்ட வல்லுநர்கள், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் மற்றும் காவிரி தொழில்நுட்பக் குழுவின் (Cauvery Technical Cell) உயர் அலுவலர்கள் பங்கேற்று, தமிழகத்திற்குரிய சட்டப்பூர்வ உரிமைகளைப் பெற மேற்காள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை திட்டங்களை முன்வைத்தனர்.
தமிழகத்தின் நீர் உரிமைகளை எந்தச் சூழலிலும் விட்டுக் கொடுக்காமல், விவசாயிகளின் நலனைக் காப்பதில் அரசு உறுதியோடு செயல்படும் என்பதை முதலமைச்சரின் இந்த அதிரடி நடவடிக்கை உணர்த்துகிறது!


